சவுக்கு இணையதளத்தை தொடர்ந்து வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். சவுக்கு தளம் தோற்றுவிக்கப்பட்டபோது அதற்கு ஆதரவாக ஒரு பதிவெழுதினேன். அது இங்கே. ஒன்பது மாதங்கள் கழித்து சவுக்கு தளத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன்?
சவுக்கு தளம் இன்னமும் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டு வருகிறது. சவுக்கு சங்கரின் துணிச்சல் ஒரு பக்கம். அவரது கருத்துக்களும், எழுத்து நடையும் இன்னொரு பக்கம். பல நேரங்களில் அவரது தகவல்களும், கணிப்புகளும் சரியாக இருப்பது மற்றொரு பக்கம். புலனாய்வுப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் எல்லாப் பத்திரிகைகளை விடவும் சவுக்கு தளம் துல்லியமாக விஷயங்களைச் சொல்கிறது என்றே கருதுகிறேன். சங்கர் எழுதிய ஒரு நகைச்சுவைக் கதையை சோ தனது ஆண்டு விழாவில் சொல்லுமளவுக்கு அவரது எழுத்துத் திறன் அமர்க்களமாக உள்ளது.
ஜாபர் சேட் என்ற ஒரு காவல் அதிகாரியைக் குறிவைத்து அதிகமாகத் தாக்குவது, சில சமயங்களில் விமர்சனங்களில் நாகரீக எல்லையை மீறுவது போன்றவை அவ்வப்போது நெருடலாக அமைகின்றன. இருந்தாலும், அவற்றையும் தாண்டி இந்த தளம் சிறப்புடன் வளர்ந்து வருகின்றது.
தமிழகத் தேர்தல் முடிந்தவுடன் சவுக்கு “புதிய ஆட்சியில் ஜெ என்னென்ன செய்ய வேண்டும்?” என்று வாசகர்கள் கருதுவதை எழுதியனுப்பச் சொல்லியிருந்தார். ஜெ பற்றி சமீபத்தில் வைகோ என்ன சொன்னாரோ (அவர் மாறவுமில்லை, மாறப் போவதுமில்லை), அதுதான் எனது அனுமானமும். எனவே, சவுக்கிடம் கேட்டுக் கொள்ளப் போவது ஒன்றுதான்: திமுகவிற்கு மாற்று அதிமுக; அதிமுகவிற்கு மாற்று திமுக என்ற பூஜ்யக் கூட்டல் கழித்தல் விளையாட்டிலிருந்து (zero sum game) தமிழகத்திலிருந்து அடுத்த தேர்தலிலாவது விடுவிக்க உங்களாலானதைச் செய்யுங்கள்.
10 comments:
what a co-incident , ur blog or my blog look like same each other
எனக்கு பிடித்த தளமும் கூட.
//சில சமயங்களில் விமர்சனங்களில் நாகரீக எல்லையை மீறுவது போன்றவை அவ்வப்போது நெருடலாக அமைகின்றன. //
ஒரு புலனாய்வு பத்திரிகைக்கான அனைத்து தகுதிகளும் சவுக்கு தளத்திற்கு இருந்தும் பின்னூட்டப் பகுதி அதன் தரத்தை மிகவும் குறைக்கிறது.
தி.மு.கவிற்கு மாற்று அ.தி.மு.க என்ற சவுக்கின் நிலைப்பாடு பரிதாபத்திற்குரியது:)
ஷர்புதீன், நன்றி. சில விஷயங்களில் நமது ரசனைகள் ஒன்றி வருகிறதை நானும் கவனித்தேன். உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.
ஆர்.கே. சதீஷ்குமார்,
தங்களது வருகைக்கு மிக்க நன்றி.
ராஜ நடநடராஜன்,
//ஒரு புலனாய்வு பத்திரிகைக்கான அனைத்து தகுதிகளும் சவுக்கு தளத்திற்கு இருந்தும் பின்னூட்டப் பகுதி அதன் தரத்தை மிகவும் குறைக்கிறது.//
உண்மைதான். ஆனால், இது தளத்தின் குற்றமல்ல. வருகை தருகிறவர்கள் சிலரின் தரம் அப்படித் தாழ்ந்து போயிருக்கிறது. சவுக்கு தளத்தில் மட்டுமல்ல, பல தளங்களின் பின்னூட்டப் பகுதிகளிலும் இந்தக் குறை நிலவுகிறது.
//தி.மு.கவிற்கு மாற்று அ.தி.மு.க என்ற சவுக்கின் நிலைப்பாடு பரிதாபத்திற்குரியது:)//
இந்த முறை வேறு வழியில்லை. மீண்டும் திமுக வந்தால் தமிழகத்தின் கதி அதோகதிதான். ஆனால், துக்ளக் சோ போல அதிமுக வருவதை கண்ணை மூடிக் கொண்டு சவுக்கு ஆதரிக்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்து தவறுகள் செய்யும் போது சவுக்கு அதை எப்படிக் கண்டிக்கிறார் என்பதையும் உற்று நோக்க வேண்டும். பொதுவில் வைக்கப்படும் விமர்சனங்களை ஜெ. மு.க.வை விட மூர்க்கமாக இருப்பவர் என்பதால் சவுக்கிற்கு இன்னமும் பொது மக்கள் ஆதரவு தேவைப்படும்.
//
இந்த முறை வேறு வழியில்லை. மீண்டும் திமுக வந்தால் தமிழகத்தின் கதி அதோகதிதான். ஆனால், துக்ளக் சோ போல அதிமுக வருவதை கண்ணை மூடிக் கொண்டு சவுக்கு ஆதரிக்கவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்து தவறுகள் செய்யும் போது சவுக்கு அதை எப்படிக் கண்டிக்கிறார் என்பதையும் உற்று நோக்க வேண்டும். பொதுவில் வைக்கப்படும் விமர்சனங்களை ஜெ. மு.க.வை விட மூர்க்கமாக இருப்பவர் என்பதால் சவுக்கிற்கு இன்னமும் பொது மக்கள் ஆதரவு தேவைப்படும். //
ஏ.வி.எஸ்!இந்த முறை என்ற ஒற்றைச் சொல்லால்தான் ஜெயலலிதாவை விரும்பாதவர்களும் கூட மாற்றத்தை செய்து பரிட்சித்துப் பார்க்கலாமே என்று நினைக்கிறார்கள்.ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி மொழி “அம்மையார்” மாறுவாரா என்ற சந்தேகத்தை வை.கோ வை தனிமைப்படுத்தியதன் மூலம் செய்ல்படுத்தியிருக்கிறார்.பள்ளியில் படிக்கும் பாடங்களுக்கும்,உயர்நிலைப்பள்ளி நிலைக்கும்,கல்லூரி நிலைக்கும் அதற்கப்பால் வாழ்க்கை தரும் பாடங்கள் என மனிதன் பரிணாம வளர்ச்சியில் பயணிக்கும் போது ஜெயலலிதாவின் ஆணவம்,தன்னிச்சை செயல் என்று ஜெயலலிதா அரசியல் பாடத்தில் பரிணாம வளர்ச்சியடைவதாக காணோம்.
எளிதில் கணிக்க வேண்டிய தேர்தலை இன்னும் தி.மு.கவும்,ஊடகங்களும் தொங்கு நிலையென்ற சூழலுக்கு ஜெயலலிதாவின் பித்துக்குளித்தனம் காரணமல்லவா?
ராஜராஜன், ஜெ.யின் அரசியல் குறித்த உங்கள் கருத்துக்களோடு முற்றிலும் உடன்படுகிறேன். இருப்பினும் "இந்த முறை.." என்ற சிந்தனை எழுவதற்குள்ள காரணத்தை நீங்கள் அறிவீர்கள். அளவு கடந்த ஊழல், சகிக்க முடியாத நிர்வாகச் சீர்குலைவு ஆகியவற்றைத் தரும் ஒரு கட்சி, ஓட்டிற்குப் பணம் கொடுத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற ஒரு நிலைமை தோன்றுவது நிரந்தரமான ஒரு பின்னடைவாகும். எனவேதான் வேறு வழியில்லாமல் ஜெ.யின் வெற்றியை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
இது வரை அந்த தளத்தில் ஜெயை கடுமையாக விமரித்து எதுவும் எழுதப்படாதது சற்றே நெருடலாக இருக்கிறது.. பார்க்கலாம்!
சோவையை கவர்ந்த , அந்த நகைச்சுவை கதை எது ?
Post a Comment