
சந்தேகமேயில்லாமல் திமுக கூடத்தான்.
காங்கிரஸ் கூட்டணி குறித்து கடந்த ஒரு ஆண்டாக பத்திரிகைகள் மூன்றுவித ஊகங்களைச் சொல்லி வருகின்றன: (1) தொடர்ந்து திமுகவுடன்; (2) அணிமாறி அதிமுகவுடன்; (3) விஜயகாந்துடன் மூன்றாவது அணி. இதில் விஜயகாந்துடன் தனியாக கூட்டணி என்பதற்கு இடமே கிடையாது. நாடாளுமன்ற மக்களவையில் 18 எம்பிக்கள் குறைவதை விஜயகாந்துடன் சேர்ந்து எப்படி சரிக்கட்ட முடியும்? விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதுவே அநேகமாக வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்பதால் அதில் காங்கிரஸ் இடம் பெற வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால், காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு தமிழக சட்டசபைத் தேர்தல் வெற்றியை விட முக்கியம் அடுத்த மக்களவைத் தேர்தல்தான். அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், அநேகமாக ஓரிரண்டு வருடங்களில் மறுபடியும் மக்களைப் பகைத்துக் கொள்வார்; மக்களவைத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் திமுகவிற்கே அலையடிக்கும் என்ற கணக்கு இறுதியில் வெல்லும் என்று தோன்றுகிறது.
இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும் இந்த பதிவைப் பற்றி நான் வெட்கப்பட வேண்டுமா, பெருமைப்பட வேண்டுமா என்று.
8 comments:
யாருமே கமெண்ட் போடாத உன் பதிவை பார்த்தால் பாவமாக இருக்கிறது அதான் போனால் போகிறது என்று உனக்கு ஒரு கமெண்டு போடுகிறேன்
உடன்பிறப்பே,
உன் கரிசனம் கண்டு இறும்பூது எய்துகிறேன். வீட்டிற்கு ரேசன் பொருட்களை அனுப்பித் தருவது போல நீயாக வந்து பின்னூட்டம் போட்டுகிறாயே. எவ்வளவு கருணையான மனதய்யா உனக்கு?
பின்னூட்டங்களே வருவதில்லை என்ற கவலையில் என் மனம் வாடிக் கிடக்கிறதய்யா. என்ன செய்யலாம்? பின்னூட்டம் ஒன்றிற்கு ரூ 10 கொடுப்பது என்று நிர்ணயித்து விடலாமா? அப்படிச் செய்வதற்கு என்னிடம் 1.76 லட்சம் கோடி நயா பைசா, ஏன் 1.76 ஆயிரம் நயா பைசா கூட கிடையாதே. நீ முன்பணமாக தந்து உதவுவாயென்றால் தேர்தலின் ஓட்டுப் போட்டு விட்டு கழித்துக் கொள்ளுகிறேன். கரிசனம் கொண்ட உன் கருணை மனது என் கோரிக்கையை நிராகரிக்காது என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். ஏதாவது வழி செய்.
மேற்கண்ட பதிவையும், பின்னூட்டங்களையும் வாசிக்க நேரிடுபவர்களுக்கு…
உடன்பிறப்பிற்கு என் மேல் காட்டம் மேலிடுவதற்கான காரணம் ஏன் என்பது ஒரு சுவாரசியமான விஷயம்.
லக்கிலுக் யுவகிருஷ்ணா சீமானைப் பற்றி போட்ட ஒரு பதிவில் (http://www.luckylookonline.com/2011/01/blog-post_11.html) உடன்பிறப்பு கீழ்க்கண்ட பின்னூட்டத்தை விட்டிருந்தது:
>> உடன்பிறப்பு 8:27 PM, January 11, 2011
கவலைப்படாதீங்க யுவா அம்மா ஆட்சி மலர்ந்ததும் எப்படியும் இவர் பொடாவில் உள்ளே போவது உறுதி >>
என்னடா இது “1.76 லட்சம் கோடியை ஒரு ஆளாக அடித்திருக்க முடியுமா?” என்று தலைவர் “எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல” வாக்குமூலம் கொடுத்த மாதிரி, தொண்டரும் பேசுகிறாரே என்று நினைத்த நான் இதற்கு ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்:
>> ஏவிஎஸ் 8:10 AM, January 13, 2011
உடன்பிறப்பே, உனக்கே அம்மா ஆட்சிக்கு வந்து விடுவாரென்று தோன்றுகிறதா? அதுவும் உறுதியாக வேறு.
பேஷ், பேஷ் >>
இதற்குத்தான் உடன்பிறப்பு என்னைக் கேலி செய்ய முயற்சிக்கிறதாம். எனக்கென்னமோ “உங்களயெல்லாம் பாத்தா பாவமா இருக்கு”ங்கற கைப்புள்ள டயலாக்தான் ஞாபகம் வருது.
முடிவு எப்படியிருந்தாலும், வெட்கப்படவே வேண்டும்!
"நல்லவர்கள் வேறு; நலங்காட்டும் அரசியலில்
வல்லவர்கள் வேறு" என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவிற்கு வந்து போகிறது.
//கரிசனம் கொண்ட உன் கருணை மனது என் கோரிக்கையை நிராகரிக்காது என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். //
HAHHAHAHAHAHAHAHAHAHAHA
அன்புள்ள அருள் விக்டர் , ஞாயிறு தபால் பார்த்தேன் , மிக்க மகிழ்ச்சி. எழுதுவது ஞாயிறு மட்டுமா? தினமுமா?
அது சரி நீங்கள் பிறக்கும் போது நெல்லை மாவட்டம் சரி, நீங்கள் வளர்த்தது எல்லாம் தூத்துக்குடி மாவட்டம்தான்.
நண்பன், வசீகரன், செய்தியாளர் , சன் தொலைகாட்சி, தூத்துக்குடி.
M.VASIKARAN,
98946 02940
வசி,
வருக, வருக என்று இருகரம் கூப்பி வரவேற்கிறேன். எப்படிக் கண்டு பிடிச்சீங்க?
ஞாயிற்றுக் கிழமை எழுதுவதே பெரும் பாடு. தினமுமா? அதெல்லாம் உங்களைப் போன்ற உழைப்பாளிகளுக்குத்தான் முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் உதயமாகி இரண்டு ஆண்டுகள்தானே அங்கே இருந்தேன். அதனால்தான் நெல்லை மாவட்டம் என்கிறேன்.
அடிக்கடி வந்து கமெண்ட் போடுங்கள். இல்லையென்றால் உடன்பிறப்பு வருத்தப்படுவார் :)
பிரகாஷ்,
நம்பிக்கைகள் தகர்க்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. எந்தக் கூட்டணிகளும் இந்த நிலையை மாற்றியமைக்கப் போவதில்லை என்பது உண்மையே.
Post a Comment