
ஹோ சி மின் நகரில் …. மீண்டும் ஏழாவது மாவட்டம்.
ஒரு கொரிய உணவகத்தில் இரவுச் சாப்பாடு.
வெளியே வரும் போது மழை பெய்து முடித்து தெருவெல்லாம் ஈரம்.
தவளைகள் ஒரே ஸ்வரத்தில் விட்டு விட்டு பாடிக் கொண்டிருந்தன.
ங்கொய்…ங்கொய்…ங்கோய் … ங்கொய் …
“எனக்கு இந்த தவளைச் சத்தம் ரொம்பப் பிடிக்கும்” என்றார் இந்தோனேசிய நண்பர் நிங்.
“நீரும், நிலமும், காற்றும் தூய்மையாக இருக்குமிடத்தில்தான் தவளைகள் இருக்கும். எனவே இங்கே சுற்றுப்புறச் சூழல் நன்றாக இருக்கிறதென்று அர்த்தம்” என்றேன் நான். சமீபத்தில் தவளைகளைப் பற்றி ஜெயமோகன் எழுதியதிருந்த நல்ல கட்டுரை ஒன்றும் நினைவுக்கு வந்தது.
“மறுபடியும் எனக்குப் பசிக்கிறது” என்று தன் வயிற்றைத் தட்டிக் கொண்டே சொல்லிச் சிரித்தார் கொரிய நண்பர் ஜங்.
(தவளை படம் சுட்ட இடம் இங்கே)
No comments:
Post a Comment