நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
நண்பர் மேலை நாட்டுக்காரர். தொழில் சம்பந்தமாக அடிக்கடி இந்தியா சென்று வருபவர். பந்தாவோ, அகம்பாவமோ துளிக்கூட இல்லாதவர்.
இந்த முறை இந்தியா பற்றி பேச்செழுந்தது. நண்பர் ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்தியாவில் இருந்து விட்டு வந்திருந்தார். “நானொன்று சொன்னால் தப்பாக நினைக்க மாட்டாயே?” என்றார். “இல்லை.”
“I have been thinking about this. You Indians do not respect your country” என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார் “You respect your culture. You respect your religions. But, you don’t simply respect your country.”
இதைப் பற்றி இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு நல்ல பேட்டியை நான் இன்று வாசித்தேன். “நாம் சமூகமாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஏதோ தன்மையை இழந்துவிட்டோம்” என்று முத்துக்குமாரசாமி சொல்வதற்கும், நண்பர் சொல்வதற்கும் எதோ தொடர்பு இருக்கிறதென்றே தோன்றுகிறது.
--
யுவகிருஷ்ணா ராக்ஸ்டார் பற்றிய விமரிசனம் நன்றாக எழுதியிருக்கிறார். அந்தப் படத்திலிருந்து சில பாடல்களை யூட்யூபில் கேட்டேன். ரொம்பப் பிடித்திருந்தது.
என்னிடமிருந்த “பிருந்தாவனம்” குறுந்தட்டை நண்பர் ஒருவருக்குக் கொடுத்து திருப்பிக் கொடுக்கும்படிக் கேட்டிருந்தேன். அது திரும்பி வரவில்லை. அதிலிருந்து “கனிகள் கொண்டு தரும்” பாடலை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது அது யூட்யூபில் ஏற்றப்பட்டுள்ளது.

2 comments:
**

உண்மைதான். நமக்குப் பொதுவான brown ass தவிர்த்து நம்மைப் பிணைக்க என்ன இருக்கு?
Anony,
Funny comment. ஆனால் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம்மைப் பிரிப்பவை பலவாயினும், இணைப்பவை நீண்ட ஒரு பாரம்பரியமும், கலாச்சாரமும். நமது பிரச்சினையின் ஆணிவேர் நமது வாழ்க்கையை வேறு எவரோ தீர்மானிக்கட்டும் என்று வாளாவிருக்கும் நமது மனநிலைதான் என்று தோன்றுகிறது. இதைக் குறித்து எவ்வளவு சிந்தித்தாலும், குற்றம் சாட்டும் விரல் இறுதியில் நம்மையே நோக்கி நிற்கிறது.
Post a Comment