உயிர்மை இதழில் எஸ். ராமகிருஷ்ணன் திரைப்படங்களைப் பற்றி ஒரு பத்தி எழுதத் தொடங்கியிருக்கிறார். சமீபத்திய இதழில் நான் படித்த கட்டுரை நன்றாக இருந்தது. பாலச்சந்தர் திரைப்படப் பாடல்கள் பற்றியும், சாவித்திரி இயக்கிய தமிழ்த் திரைப்படம் தோல்வியடைந்தது குறித்ததுமான அலசல்கள்தான் இந்தத் தவணை. பின்னதில் இதுவரை கேள்விப்பட்டிராத விபரங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
---
பாரதியார் முக்கியமான ஒரு கவிஞர்; ஆனால் அவரை மகாகவி என்று அழைக்க முடியாது என்று ஜெயமோகன் அவரது தளத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். சிந்தனைக்குரிய விவாதம். பாரதியின் கவிதைகளைக் கேட்டுப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பாரதி பாடல்கள் தொகுப்பினைக் கேட்டேன். “வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்” பாடலில் “வானையளப் போம் கடல்மீனை யளப்போம்” என்ற போது இந்த மனிதர் மகாகவியோ இல்லையோ, தன் காலத்திற்கு முப்பது, நாற்பது ஆண்டுகள் தாண்டிச் சிந்தித்த ஒரு அற்புதமான மனிதன் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது.
---
‘தி சிம்ப்சன்ஸ்” இருபத்தி இரண்டாவது சீசன் டிவிடி கிடைத்தது. கிட்டத்தட்ட அத்தனை எபிசோடுகளையும் பார்த்து விட்டேன். 1989 முதல் இன்று வரை தொடர்ந்து தொலைக்காட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த நகைச்சுவைக் கார்ட்டூன் தொடர் இன்னும் இரண்டாண்டுகள் வரைக்கும் செல்லலாம் என்கிறார்கள். கார்ட்டூன் பாத்திரங்களுக்காக பின்னணி பேசுபவர்கள் ஒரு 20 நிமிட எபிசோடுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய்களுக்கு சமமான டாலர்கள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதை இப்போது ஒன்றரை கோடி ரூபாய்களாக குறைத்து விட்டார்களாம். பார்வையாளர்கள் குறைந்து வருவதால் வருமானம் போதவில்லையாம்.
ஹாலிவுட் திரைப்படங்களைப் பற்றியும், மற்ற அயல் நாட்டு திரைப்படங்களைப் பற்றியும் தமிழ் ஊடகங்களில் (இணையம் உட்பட) எழுதப்படுகின்றது. ஆனால் அயல்நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றி அதிகமாக எழுதப்படுவதுபோல் தெரியவில்லை. அமெரிக்காவில் திரைப்படங்களுக்கு நிகரான ஒரு கலை வணிக முயற்சியாக தொலைக்காட்சித் தொடர்கள் இருக்கின்றன. பல தொடர்கள் திரைப்படங்களை விட வெற்றியை அடைகின்றன. இத் தொடர்கள் இப்போது நம் நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் காட்டப்படுவதால் இவற்றைப் பற்றி யாராவது எழுதினால் நன்றாக இருக்கும்.